கொழும்பிலுள்ள மகளிர் மருத்துவமனையின் விந்தணு வங்கியில் 40 நன்கொடையாளர்கள் பதிவு
கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் விந்தணு வங்கியில் இதுவரை 40 நன்கொடையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் அஜித் குமார தண்டநாராயண தெரிவித்துள்ளார்.
விந்தணு தானம் தொடர்பாக தினமும் பல தொலைபேசி விசாரணைகள் வருகின்றன என்றும், ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவுவது என்பதோடு, தானம் செய்ய முன்வரும் ஆண்கள் பல்வேறு மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
விந்தணு தானம் செய்ய விரும்புவோர் மருத்துவமனை நிர்வாகத்துடன் 0112 67 89 99 / 0112 67 22 16. போன்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி