நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று!


நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியாகியுள்ளது.

மொத்தமாக, கடந்த ஆண்டு மாத்திரம் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதாகவும், இவர்களில் 718 பேர் ஆண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், 47 பேர் எய்ட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.