மூன்றே நாட்களில் இலட்சாதிபதியான பிச்சைக்காரர்!


ரமழான் மாதத்தில் சிலர் சட்டவிரோதமாக பிச்சை எடுப்பதை தடுக்க ஐக்கிய அரபு அமீரகம் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஷார்ஜா நகரில் ஒரு மசூதி அருகே பிச்சை எடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாக நாடு நுழைந்தவர் எனவும், வெறும் மூன்று நாட்களில் பிச்சை எடுத்ததன் மூலம் 3.26 லட்சம் (14,000 திர்ஹாம்) சம்பாதித்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

ரமழான் காலத்தில் பிச்சை எடுப்பது ஒரு குற்றச்செயலாகும். ஆனால், சிலர் இதை ஒரு "பருவகால தொழிலாக" மாற்றி வருகின்றனர். இதைத் தடுக்க, டுபாயில் இதுவரை 127 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 11.66 லட்சத்துக்கும் (50,000 திர்ஹாம்) அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

அரபு அமீரக அதிகாரிகள், பொதுமக்களிடம் பிச்சை எடுப்பதைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ தானம் அளிக்கும் முறைகளைப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளனர்.