இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்


இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில், நரேந்திர மோடி 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த மாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பேங்காக்கில் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 4 முதல் 6 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார். இந்த பயணத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் பிரதமருடன் பங்கேற்கவுள்ளார்.