தேர்தல் காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிவுறுத்தல்


தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அந்த ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரசுத் திணைக்களங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்க வேண்டும். இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, ஆணைக்குழு அவற்றை மறுஆய்வு செய்து இறுதியாக முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், இத்திட்டங்களில் தேர்தலுக்கு நேரடியான தாக்கம் செலுத்தக்கூடியவை இருந்தால், அவற்றை தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்படும்.

தேர்தல் காலத்தில் அமைச்சரவையால் எடுக்கப்படும் முக்கியமான தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு, அவற்றை மறுஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை அரசாங்கத்திற்கு வழங்கும் நடைமுறை வழக்கமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.