வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்
வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவேற்றும்போது, பாடலோ இசையோ சேர்க்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதி அனைத்து வாட்ஸ் ஆப் பயனர்களுக்கும் கிடைத்த நிலையில் அவர்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை, பாடல் சேர்க்கும் அம்சம் மெட்டாவின் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருந்தது.
இன்ஸ்டாகிராமில் பாடல் சேர்த்து எடிட் செய்த வீடியோவை பதிவிறக்கம் செய்தால், அது இசையின்றியே கிடைப்பது ஒரு குறையாக இருந்தது. இசையுடன் பதிவிறக்கம் செய்ய, மூன்றாம் தரப்புச் செயலிகளை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்ததனால், பயனர்கள் இன்ஸ்டாவில் எடிட் செய்த வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்வதில் சிரமம் அனுபவித்தனர்.
இப்போது, வாட்ஸ் ஆப்பிலும் பாடல் சேர்க்கும் வசதி வந்துள்ளதால், பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்களுக்கு 15 நொடிகளும், வீடியோக்களுக்கு 60 நொடிகளும் இசையுடன் சேர்க்கும் வகையில் இந்த புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.