இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்


நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் மாற்றமடைந்து வருகிறது. இந்த நிலைமைக்கமைவாக, நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது, இன்றைய தினம் (24) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் (ounce) தங்கத்தின் விலை 897,977 ரூபாவாக உள்ளது. 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,680 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், ஒரு பவுண் 253,450 ரூபாவாக காணப்படுகிறது. அதேபோல், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,040 ரூபாவாகவும், ஒரு பவுண் 232,350 ரூபாவாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,720 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பவுண் 221,800 ரூபாவாக உள்ளது. அதேவேளை, கொழும்பு செட்டியார் தெருவில் நிலவும் தங்க விலை தொடர்பான தகவலின்படி, 24 கரட் தங்கப் பவுண் 237,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் 219,200 ரூபாவாகவும் உள்ளது.

இவை பொது சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை நிலவரங்கள் என்பதோடு, ஆபரணத்திற்கான விலைகள் மேல் குறிப்பிடப்பட்ட விலைகளில் இருந்து மாறுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.