நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இன்றைய தினம் (27) புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அதன்படி, விசாரணைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி