அனுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் : பிரதான சந்தேக நபர் அடையாளம்!
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது பாலியல் வன்கலவி செய்த சம்பவத்தில் முதன்மை சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரியா முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது, பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை சுட்டிக்காட்டினார்.
இந்த அடையாள அணிவகுப்பு இன்று (28) அனுராதபுரம் தலைமை நீதிபதியின் அலுவலக விடுதியில் நடத்தப்பட்டது.
குறித்த சம்பவம், 2024 மார்ச் 10 ஆம் தேதி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் நடந்தது. சந்தேக நபர் ஒரு கத்தியால் அச்சுறுத்தியபடி, மருத்துவமனையின் அலுவலக விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கலவி செய்தார். பின்னர், அவரது மொபைல் தொலைபேசியை திருடிச் சென்றார்.
இதனையடுத்து, களனாவ பகுதியில் மறுநாள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட மொபைல் தொலைபேசியை டிராக் செய்து, பொலிஸார் அவரைக் கண்டறிந்தனர்.
தற்போது சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (28) அனுராதபுரம் நீதிமன்றில் அவர் முன்னிறுத்தப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மருத்துவத் துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அடையாள வேலைநிறுத்தம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.