காசா படுகொலைகளை எதிர்த்து ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள கண்டன அறிக்கை!


புனித ரமளான் மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பலஸ்தீன் காசா பகுதியில் ஆக்கிரமிப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நெறிகளை முற்றிலுமாக மீறிய தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடுமையாகக் கண்டிக்கிறது.  

காசா மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் முகாம்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்களால், குழந்தைகள், பெண்கள், முதியோர் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். இத்தகைய மானுடத்திற்கு எதிரான செயல்கள் எந்தவொரு நியாயத்தையும் மீறியவை.  

இந்த மிலேச்சத்தனமான வன்முறைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டிப்பதோடு, மேலும், சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு, அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.