4,000க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை - போக்குவரத்து போலீசார் அதிரடி
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 4,000க்கும் அதிகமான சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இந்த கண்காணிப்பு திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வரை, வீதி விதிகளை மீறிய 4,048 சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, சிலர் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உரிமை மாற்றம் செய்யப்படாத 241 வாகனங்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன விற்பனை நடைபெறும் போது உரிமை மாற்றம் கட்டாயம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 724 வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன; இதில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தவிர, இவ்வாண்டின் இது வரையான காலப் பகுதியில் 1,535 கடுமையான விபத்துகளும், 2,699 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி