வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படும் திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தேதிகள் தொடர்பாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார விசேட அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 16 முதல் 29 வரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 20 சிறப்பு விநியோக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி