பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டரைக் கூட அதிகமான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் காணப்படும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பநிலை நிலவும்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், நாட்டைச் சுற்றியுள்ள பிற கடலோர பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கடலோரப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கே அல்லது தென்மேற்கே இருந்து காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.