பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவு தொடர்பில் வெளியான தகவல்


பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவினை வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் செயல்படுத்த, அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார். 

பாடசாலை மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில், உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் போசாக்கான உணவுகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. 

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் இரத்த சோகையை நீக்க இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்துடன் தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி, பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்.