யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டிக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு


பண
 மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.

இதன் போது பிரதிவாதிகள் இருவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்குடன் தொடர்பான விரிவான விசாரணைகள் மே 30 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.