பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடான பப்புவா நியூ கினியா நாட்டில், நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே, சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags:
உலகம்