உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்


எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஏப்ரல் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

ஏப்ரல் 29 ஆம் திகதியே உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் இறுதி தினம் ஆகும்.

ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு பின்னரும் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேருநர் இடாப்பில் பதிவு செய்த முகவரிக்கு உரிய தபால் நிலையத்திற்கு சென்று தங்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.