முட்டை விலையில் வீழ்ச்சி!
முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணமாக கருதப்படுகிறது.
அதற்கமைய 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை புத்தாண்டு காலத்தில் 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி