கசினோ விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபை ஒன்றை நிறுவ தீர்மானம்
கப்பல்களில் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெறும் கரை கடந்த மற்றும் நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை உட்படுத்தி, நாட்டின் சூதாட்ட விளையாட்டுத் துறையை மேற்பார்வையிடும் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையொன்றை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் 2025 ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
2025 பெப்ரவரி 24 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சட்டமூலத்தை தயாரிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூதாட்ட விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி