நாட்டின் பல பகுதிகளிலும் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!


அயன அயல் ஒருங்கல் வலயம் அதாவது வட அரைக்கோளத்தில் இருந்தும் தென் அரைக்கோளத்தில் இருந்தும் காற்று வந்து ஒருங்குவதனால் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய ,மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை  மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ,காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.