நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இரு நாட்கள் விடுமுறை : வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் பாடசாலைகளை மே 04ஆம் திகதி அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மேசைகள், கதிரைகள், பாடசாலை மண்டபங்களுக்குள் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் மே 06ஆம் திகதி நாடு முழுவதும் (ஒரு சில சபைகளைத் தவிர) உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, மே 07 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.