கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் நீரில் மூழ்கிய சிறுவன் பலி!
கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில், வியாழக்கிழமை (24) மாலை குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பொது மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்ற வேளையில் இச்சம்பவத்தில் இரு மாணவர்கள் தப்பித்து கரை ஏறியுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி