தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து அவரை அன்றிலிருந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேஷபந்து தென்னகோனை 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி