தேர்தல் ஆணையம் தபால் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு


தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும், சான்றளிக்கும் அதிகாரியை அடையாளம் காணவும், தேர்தல் ஆணையம் 'இ' (e) சேவையை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது.

இந்த சேவை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் குழுக்கள் மற்றும் கட்சிகள், மேலும் அவர்கள் பயன்படுத்தும் சின்னங்களை அடையாளம் காணும் செயல்முறையை எளிமைப்படுத்துகிறது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ‘e’ சேவையை eservices.elections.gov.lk என்ற இணையதள முகவரி மூலம் அணுகலாம்.

மேலும், பொது அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்க தேவையான தகவல்களும் இதே இணையதளத்தின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.