சலுகை விலையில் வழங்கப்படவிருந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி விடயத்தில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு..!


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு சலுகை விலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க அரசாங்கம் முன் எடுத்த தீர்மானம், தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் தேர்தலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலாளருக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பொதிகள், 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட பரிந்துரையின் கீழ், தகுதியான பயனாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தன. ரூ.5000 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய இப்பொதி, ரூ.2500 என சலுகை விலையில் வழங்கப்படும் என்ற அரசாங்கத் தீர்மானத்துக்கு சமீபத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

மேலும், ஏப்ரல் 1 முதல் 13ஆம் திகதி வரையில் லங்கா சதொச மற்றும் கோ-ஆப் விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த பொதிகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.