நகைப் பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி ; உச்சம் தொட்ட தங்க விலை!


இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 5.16 சதவீதம் என்ற அபார உயர்வை பதிவுசெய்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

உலக சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3,486 டொலராக பதிவாகியுள்ளது. இந்த சர்வதேச விலை உயர்வு, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் வழங்கிய தகவலின்படி,
24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு ரூ.5000 உயர்ந்து, தற்போது ரூ.277,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு ரூ.3000 அதிகரித்து, ரூ.255,000-க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ரூ.15,000 உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை குறையக்கூடும் எனவும், இது சர்வதேச சந்தை சூழ்நிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகப் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.