நரேந்திர மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள்..!


பிலியந்தலை பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டிய இரண்டு இளைஞர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இருந்து பல சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியப் பிரதமரின் வருகைக்கும், அவர் கையெழுத்திடவுள்ள ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், குறித்த இளைஞர்கள் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து சுவரொட்டிகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.