இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார அதிகாரபூர்வ வரவேற்பு


இன்று சனிக்கிழமை (05) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் அதிகார பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  வெள்ளிக்கிழமை (4) இரவு இலங்கை வந்தடைந்தார்.

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதோடு, பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.