கைகூடாத காதலினால் உயிரை விட்ட மாணவன்!


அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை (20) தற்கொலை செய்து கொண்டதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற குறித்த மாணவன், சமீபத்தில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், தற்கொலைக்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டுள்ளதும், அத்திமலை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.