பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்க பெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இக்குறித்த திட்டத்திற்கு எதிர்வரும் நாட்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் பணி
துரிதமாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளதுடன் நேற்று (18) நாடாளுமன்றத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான மேலதிக மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஆறாயிரம் (6000) ரூபாய் கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.