அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

2 weeks ago

நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.  முன்னதாக 8 லட்சம் பேருக்கு மாதம் 8,500 ரூபா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை 10,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.