2 லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து - ஒருவர் காயம்

2 weeks ago

இன்று காலை (04) மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரண்டு மரக்கறி லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயிலுக்கும் குருகஹா துஹெதெகெம நுழைவாயிலுக்கும் இடையில் மரக்கறி ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இக்குறித்த விபத்தின் போது வீதி முற்றாகத் தடைப்பட்டு வீதி சேதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாத்தறையிலிருந்து மரக்கறி ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லொறியின் பின்னால் வந்த கொள்கலன் பெட்டியை ஏற்றிச் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதில், முன்னால் சென்ற மரக்கறி லொறி வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துடன் கொழும்பு நோக்கிய பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களை ஹதெக்ம நுழைவாயிலில் இருந்து வெளியேறி சாதாரண வீதியூடாக வெலிப்பன்ன நுழைவாயிலுக்குத் திரும்பி அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையுமாறும் அறிவுறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.