நாட்டின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வெளியான வானிலை அறிவிப்பு!
கடந்த 23 ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான இந்த தாழ்வு நிலை, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஆழமான காற்றழுத்தமானது, முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 215 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இதன் நகரும் வேகம் மிக மிக குறைவாகவே இருப்பதுடன் இன்று காலையிலிருந்து மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடையிடையே சற்று கன மழை பெய்யும். குறிப்பாக நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (30) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த மழை இடைவெளி பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து கடலைச் சென்றடைவதற்கு வாய்ப்பான காலமாகக் காணப்படும். பல குளங்களின் நீர் கொள்ளளவு மிக உச்ச நிலையை எட்டியுள்ளதால், குளங்களின் கீழுள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். தற்போது வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடரும்.
இந்நிலையில், கன மழை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.