தேங்காய் விலை உயர்வு தொடர்பில் வெளியான தகவல். மக்கள் அதிர்ச்சியில்
2 weeks ago
தற்போது சந்தையில் தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், அதன் விலை மிகவும் உயர்ந்து, ஒன்றுக்கு ரூ.200 வரை சென்றுள்ளது.
நுகர்வோரின் கூற்றுப்படி, தேங்காயுடன் சேர்த்து அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் விளைவாக, நாட்டரிசி போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு கூடுதலான தேவையும் குறைவான வழங்கலும் ஏற்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட சில்லறை அரிசியின் மொத்த விலைகள் உயர்ந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.