அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை!
3 weeks ago
கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) தெரிவித்துள்ளது. கலாஓயா ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.