நாளைய வானிலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு

3 weeks ago

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடமேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

அத்துடன் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினத்திற்கு பிறகு வானிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.