நாட்டு மக்களுக்கு சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!
2 weeks ago
இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள் ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் காரணமாக நுளம்புகள் பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இதுவரை 45,448 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுகாதாரத்துறை, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.