அடுத்த 36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 weeks ago

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக மாறி, தற்போது சூறாவளியாக மாறும் நிலையில் உள்ளது. இந்த சூறாவளி, கிழக்கு கரையை நெருங்கி வருவதால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டத்தில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும். மற்ற பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும். கடலில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும். கடல் கொந்தளிப்பாக இருக்கும். மட்டக்களப்பு முதல் காங்கேசன்துறை வரையிலான கடற்பகுதியில் அலைகள் 2.5-3 மீட்டர் உயரம் வரை எழும்.

இந்நிலையில் மீனவர்களை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.