க.பொ.த. சாதாரண தர பரிட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

1 week ago

2024 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்று நள்ளிரவு 12:00 மணிக்கு நிறைவடைகிறது. பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இன்று (10.12.2024) நள்ளிரவு 12:00 மணிக்குப் பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றுக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட வேண்டுமென ” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் நவம்பர் 5 முதல் 30 வரை இணையவழி மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவுக்குப் பிறகு விண்ணப்பிக்க முடியாது. பள்ளி மற்றும் தனியார் மாணவர்கள் இருவரும் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நள்ளிரவு 12:00 மணிக்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.