இன்று சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்
1 day ago
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலயன்புரி தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர் பகுதி, எம்ஜிஆர் நகர், வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ செயின்ட் ஃபேஸ் I, 100 அடி சாலையின் பகுதி, அண்ணா நகர், சிஎஸ்ஆர் சாலை, ஆர்எம்எஸ், சிபிடி பி.டி., காந்தி நகர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.