புயல் குறித்து விடுவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
3 weeks ago
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் இன்று புயலாக வலுவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலையில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
இந்நிலையில், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.