பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க தீர்மானம்!
2 weeks ago
அரசாங்கம், நாட்டில் உள்ள விசேட காரணங்களைக் கருதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது. குறிப்பாக, இந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை வாங்க 6,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த முடிவு, அடுத்த பாடசாலை தவணை முதல் அமுலுக்கு வரும். குறித்த திட்டம், பிரதமர் ஹரினி அமரசூரியாவின் முன்மொழிவின் அடிப்படையில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.