இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 286.46 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 291.75 ரூபாவாக சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இந்த நிலவரத்தில், நேற்றையதினம் 300.52 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்றையதினம் 300.31 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.27 ரூபா ஆகவும், விற்பனைப் பெறுமதி 311.63 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.59 ரூபா ஆகவும், விற்பனைப் பெறுமதி 210.32 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.04 ரூபா ஆகவும், விற்பனைப் பெறுமதி 188.45 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.