நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்
1 day ago
பாடசாலைகளில் சுகாதார சேவைகள் நவீனமயமாக்கப்படுமாறு திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
இந்த திட்டம், உலக வங்கியின் ஆதரவுடன் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பாடசாலை கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு, கடந்த சில வருடங்களில், பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலைகளுக்கும் நடைமுறையில் உள்ள திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், இடைநிலைக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடப்பிரிவின் அபிவிருத்தி குறித்து பிரதமர் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.