தங்கத்தின் விலையில் மாற்றம்!

1 day ago

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன. 

நேற்றைய விலையை ஒப்பிடும் போது, இன்றைய (07) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் (1 ounce) தங்கத்தின் விலையானது 779,673 ரூபா ஆக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,510 ரூபா ஆக பதிவாகியுள்ளது. அதேபோல், 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலையானது 220,050 ரூபா ஆக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,220 ரூபா ஆக பதிவாகியுள்ளது, மேலும் 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலையானது 201,750 ரூபா ஆக காணப்படுகின்றது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,080 ரூபா ஆக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலையானது 192,600 ரூபா ஆக உள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி, 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலையானது 211,000 ரூபா ஆக காணப்படுகின்றது. அதேபோல், 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலையானது 195,000 ரூபா ஆக பதிவாகியுள்ளது.

எனினும், தங்க ஆபரணங்களின் விலை இந்த நிலவரங்களிலிருந்து மாற்றமடைய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.