க. பொ. த உயர் தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
3 weeks ago
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, டிசம்பர் 3 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட நாட்களுக்கான புதிய நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தால் இன்று (29.11.2024) பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட நேர அட்டவணையின் படியே 04 ஆம் திகதியிலிருந்து பரீட்சைகள மீள ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை மற்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்கள் முதலாவது வினைத்திறன் காண் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
IMAGE CREDIT. IBC TAMIL