புயலின் திசை மாற்றத்தால் மேலுமொரு தாழமுக்கம் குறித்து எச்சரிக்கை!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி, வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான கரையை கடக்கவுள்ளது. புயல் இலங்கையை விட்டு விலகிச் சென்றாலும், நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டம், மழை, மற்றும் பலத்த காற்று ஆகியவை ஏற்படலாம். புயலின் திசையில் ஏற்படும் மாற்றத்தால், இன்னொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் இலங்கையை நேரடியாக பாதிக்காது என்றாலும், நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக வட மாகாணத்தில் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும். நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும். புதிய தாழமுக்கம் உருவாகினால், மேலதிக மழை மற்றும் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.