தமிழ் நாட்டை நோக்கி நகரும் தாழமுக்கத்தால் இலங்கை வானிலையில் ஏற்படும் மாற்றம் வெளியான அறிவிப்பு!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த தாழ் அமுக்கம், இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான திருகோணமலை மற்றும் காங்கேசன்துறைக்கு அருகில் தற்போது நிலை கொண்டுள்ளது. திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 240 கி.மீ. மற்றும் காங்கேசன்துறையிலிருந்து வடமேற்காக 290 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்த தாழ் அமுக்கம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு கரையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வங்காள விரிகுடாவில் உருவான தாழ் அமுக்கத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும். குறிப்பாக வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தாழ் அமுக்கம் தமிழ்நாடு நோக்கி நகர்வதால் இலங்கையின் வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மாத்தளை, கண்டி மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.
மேலும், புத்தளம் தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான கடல் பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையிலான கடல் பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். குறிப்பிட்ட கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் இடைக்கிடையே கொந்தளிப்பு ஏற்படலாம். கடல் பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும்.