நாளை முதல் புதுச்சேரியில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!
1 month ago
நாளை முதல் புதுச்சேரியில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் கனமழை பெய்தது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.