நாட்டில் புதிய வரியால் வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2 weeks ago

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு வாகனங்களை மீள இறக்குமதி செய்ய முடியும் என டொயோட்டா  லங்கா நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ள்ளது. இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்  இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் விலைகளை தற்போது அறிவித்துள்ளனர்.

இருப்பினும், வெளியிடப்பட்ட விலைகள் தற்போதுள்ள அரசாங்க வரி கட்டமைப்பு மற்றும் மாற்று விகிதங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும்,வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான புதிய வரிக் கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும், அதன் கீழ் விலைகள் மாறும் என்றும், அந்நிய செலாவணி விகிதமும் வாகன விலையை நேரடியாகப் பாதிக்கலாம் என்றும் நிறுவனம் கூறுகிறது.